ஜமா பந்தியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

X
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், உதவி இயக்குநா் (நில அளவை) ராமசந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, திருப்போரூா் பேரூராட்சித் தலைவா் தேவராஜ், வட்டாட்சியா் நடராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் அரிகிருஷ்ணராவ் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Next Story

