அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு யாகம்

X
அதிமுக பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி, முசிறி-நாமக்கல் செல்லும் வழியில் அமைந்துள்ள திருஈங்கோய்மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம் யாகசாலை மண்டபத்தில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வராசு ஏற்பாட்டில் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், மாநில கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான இளங்கோவன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் வளர்மதி,மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் அண்ணாவி, பூனாட்சி, கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஏழூர்பட்டி மில்க் சரவணன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

