தாராபுரம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தாராபுரம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
X
தாராபுரம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை அலங்கியம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 52). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த வாகன விபத்தில் முத்துலட்சுமி பலத்த காயமடைந்தார். அதன் பின்னர் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈஸ்வரன் வேலைக்கு சென்று விட்டார். அப்போது தனியாக இருந்த முத்துலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
Next Story