கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
X
திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்திரம் அடுத்த வாணாபுரம், பாசார் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் கட்டுமான பணிகள் நடக்கிறது. இதனால் உண்டியல் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. பூசாரி பழனி கோவிலிலேயே தங்கியுள்ளார். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்த பழனி, போன் மூலமாக அதே ஊரைச் சேர்ந்த அன்பழகன், செல்வம் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.வந்ததும் கோவிலுக்கு வெளியே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் இருவர் இரும்பு ராடால் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு தப்பினர். உடன் துரத்திச்சென்று இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர்கள் பாசார் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் பூபதி,23; ஏழுமலை மகன் சிவா,20; என்பதும், காணிக்கை பணம் ரூ.973 திருடியதும் தெரிந்தது. இது குறித்து கோவில் தர்மகர்த்தா தனபாண்டியன், 33; அளித்த புகாரின் பேரில், இருவரையும் கைது செய்து, ரூ.973 பணம் மற்றும் விவோ மொபைல்போனை ரிஷிவந்தியம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story