வெளிதாங்கிபுரம் அருக சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடக்கம்

வெளிதாங்கிபுரம் அருக சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடக்கம்
X
சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடக்கம்
நெமிலி ஊராட்சி ஒன்றியம், வெளிதாங்கிபுரம் ஊராட்சிக்கு உட் பட்ட பாலகிருஷ்ணாபுரம், எல்லையம்மன் கோவில் தெருவில் சாலை வசதி செய்துதர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பேரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.80 லட்சம் மதிப்பீட்டில், புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியை, ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உமா, ஒன்றிய பொறியாளர் லோகேஷ், துணைத்தலைவர் தணிகைமலை, ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயம்மாள் செல்லப்பன், ஊராட்சி செயலா ளர் ராஜாராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Next Story