காஞ்சிபுரத்தில் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
X
காஞ்சிபுரத்தில் முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகன மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அடுத்த, சிறுனை கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலை ஓரமாக, ஏரிக்கரை அருகே, 65 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இறந்த நிலையில் சடலமாக நேற்று கிடந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு, இறந்த நபர் குறித்து விசாரித்தனர். இறந்த நபர் பற்றிய தகவல் தெரியாததால், மேல்ஒட்டிவாக்கம் கிராம நிர்வாக அலுவலர், பன்னீர்செல்வம், பாலுச்செட்டிச்சத்திரம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
Next Story