ஆற்காட்டில் கட்டிட தொழிலாளர்கள் பொதுக்குழு கூட்டம்!

X
ராணிப்பேட்டை மாவட்ட விவசாய தொழிலாளர்கள் கட்சி, கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசார தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுக்குழு கூட்டம் ஆற்காடு கலவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் என்.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் என்.ராஜி, மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், நிர்வாகிகள் முனியப்பன், பழனி, பஞ்சாட்சரம், பச்சையப்பன், ஆறுமுகம், வேலு, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் டி.ராஜா வரவேற்றார். மாநில கட்டுமானநல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு நலவாரியத்தில் செயல்பட்டுத்தப்படும் அரசின் திட்டங்கள், நல வாரிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விளக்கி பேசினார். இதில் ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்ல துணைத்தலைவர் எஸ்.ஆர்.பி. பென்ஸ் பாண்டியன், கூட்டமைப்பு செயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

