காவல்துறையினரை கண்டித்து சாலை மறியல்

X
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே அய்யலூர், தீத்தாக்கிழவனூர், வேங்கனூர் வடுகப்பட்டி முடக்குபட்டி கருவார்பட்டி போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக ஆடுகள் திருடு போவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் வேடசந்தூர் பகுதி பொதுமக்கள் விவசாயம் மற்றும் ஆடு மாடு வளர்ப்பதை நம்பியே வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் வடுகப்பட்டி வேங்கனூர்,தீத்தாகிழவனூர் போன்றபகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடுபோய் உள்ளது.இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அய்யலூரில் இருந்து எரியோடு செல்லும் சாலை செம்மடை என்னும் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சாலை மறியல் போராட்டத்தால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இது குறித்து வேடசந்தூர் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தால் காவல்துறை பற்றாக்குறை என்று கூறுகிறார்கள் உடனடியாக மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து ஆடு திருடும் கும்பலை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை சார்பு ஆய்வாளர் பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்திய பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story

