தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

X
பல்லடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் 102 இடங்களில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சாமிநாதன், ஒன்றிய துணை செயலாளர் ஆட்டோ குமார், பொருளாளர் அம்மாபாளையம் குமார், இளைஞரணி ராஜேஸ்வரன், மாவட்ட பிரதிநிதிகள் துரைமுருகன், அன்பரசன், மற்றும் உமா மகேஷ் குமார், பிரகாஷ், பழனிச்சாமி, பாலகுமார், ரமேஷ், முனியன், வெள்ளியங்கிரி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

