உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச.நாராயண சர்மா,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவர் திரு.ம.கணேஷ் குமார், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மு.பாபு, செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் அமீது, செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம். கே . டி. கார்த்திக் தண்டபாணி,காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம்,காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன்,மறைமலை நகர் தெற்கு நகர பொறுப்பாளர் வினோத்குமார்,செங்கல்பட்டு நகரச் செயலாளர் நரேந்திரன்,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



