திமுக சார்பில் அமைச்சர் தலைமையில் பொது மக்களுக்கு அரசியல் உணவு

X
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பாக நேற்று முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102- வது பிறந்த நாள்,செம்மொழி நாள் முன்னிட்டு நந்திவரம் ஜெய் பீம் நகர் மற்றும் நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே ஆகிய இடங்களில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு திமுக கொடி ஏற்றி வைத்து கேக் வெட்டி கொண்டாட்டினார்.இதனையடுத்து பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளையும் மதிய அறுசுவை அசைவ உணவு வழங்கினார். இதில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்,நகர மன்ற துணைத் தலைவர் ஜி.கே.லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர் ஜிஜேந்திரன் ராமு,வார்டு உறுப்பினர்கள், ஆகியோர் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

