திருப்பத்தூர் அருகே சென்னையை சேர்ந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே சென்னையை சேர்ந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் நீர்த்தேக்க ஓடையில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயம்! மூன்றாவது நாளாக உடலை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் தானாக கரை ஒதுக்கிய வாலிபரின் உடல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் சென்னையை சேர்ந்த 8 இளைஞர்கள் கடந்த சனிக்கிழமை அன்று ஏலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர் சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க ஓடைக்கு மதியம் 2 மணி அளவில் சென்று உள்ளனர். அங்கு நண்பர்கள் 8 பேரும் விளையாடி வந்துள்ளனர் அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் உதவியாளராக பணியாற்றி வந்த சென்னை அமிஞ்சிக்கரை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் விஜயகுமார் (வயது 22), என்பவர் நீரில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். இதனால் உடன் வந்த நண்பர்கள் இதுகுறித்து குரிசிலாப்பட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் சம்பவ இடத்திற்கு சென்ற குரிசிலாப்பட்டு காவல்துறையினர் திருப்பத்தூர் மற்றும் ஆலங்காயம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் ஆண்டியப்பனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிணறு மற்றும் ஏரி டேம் ஆகியவற்றில் உயிரிழந்த 20 க்கும் மேற்பட்ட உடல்களை தண்ணீரின் ஆழ் பகுதிக்கு சென்று கண்டுபிடித்துக் கொடுத்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை தீயணைப்புத் துறையினர் அழைத்து அவரின் உதவியுடன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று தீயணைப்புத் துறையினர் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருக்கிற போது விஜயகுமார் வாலிபரின் உடல் தானாகவே நீரிலிருந்து வெளிய வந்து கரை ஒதுங்கியது இதனால் உடலை மீட்டு குரிசிலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மூன்று நாட்களாக உடலை தேடும் பணியில் ஈடுபட்ட சம்பவம் இன்று முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story