சிறு விளையாட்டு அரங்கத்திற்கான பூமி பூஜையில் அமைச்சர் பங்கேற்பு

மதுரை உசிலம்பட்டி அருகே சிறு விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , சீமானூத்து - கல்லூத்து கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள " முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்" பணிகளை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் அவர்களுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்து உரையாற்றினார்கள்.
Next Story