கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று ஜூன்.10 ம்தேதி காலையில் 6 மணியளவில் தொடங்கியது . தேரோட்ட தொடக்க நிகழ்வில் பூமிநாதன் எம்எல்ஏ, மேயர் இந்திராணி, கவுன்சிலர்கள் அருண் குமார், பாஸ்கரன், நூர்ஜஹான், நாகநாதன் ஆகியோர் இருந்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Story