திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கைக்கும் எதிரானது,

திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கைக்கும் எதிரானது,
X
ஆளுநர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் அதனால் பாஜகவை தமிழகத்தில் வளர செய்ய தமிழ் திருக்குறள் பாரதி என அனைத்தும் சனாதனத்திற்கும், புதிய கல்வி கொள்கைக்கும் தொடர்பு உண்டு என பேசிவருகிறார் இவரது மாய அரசியலுக்கு மக்கள் மயங்கமாட்டார்கள். பெரம்பலூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி.
பெரம்பலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசிக தலைவரும் சிதம்பர நாடாளுமற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்தார். இதில் ஆளூநர் புதியகொள்கையின் அடிநாதம் திருவள்ளுவரும் திருக்குறளும் என தமிழக ஆளுநர் ரவியின் கருத்திற்கு பதிலளித்த திருமாவளவன் உலக மக்கள் அனைவரும் ஒரே குலம் என்றுரைத்த திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது. இதை தமிழகத்தில் ஆளுநர் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதால் இதனை சனாதனத்தோடும் புதியகல்விக்கொள்கையுடன் ஒப்பிடுவதோடு தமிழ்.,திருவள்ளுவர்,பாரதி என அனைத்தையும் சனாதனத்தோடு இனைத்து பேசுவது தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முன்னெடுத்து வருவதாகவும்.,இந்த மாய அரசியலெல்லாம் தமிழக மக்களை மயங்க செய்யாது என்றார். தொடர்ந்து அமித்ஷா திருவள்ளூவரின் பக்தர் மோடி என்ற கருத்திற்கு ஒடிசாவில் நவின் பட்னாயக்கை எதிர்த்து தமிழரை வெற்றியடைய செய்யலாமா என தமிழரை விமர்சித்த அமித்ஷா இன்று திருவள்ளுவரின் பக்தர் மோடி என கூறுவது தேர்தல் அரசியலுக்கான கருத்து என விமர்சித்தார். தொடர்ந்து அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் ஆட்சியில் பங்கு என கூறிவரும் நிலையில் அந்த கூட்டணியில் தேமுதிக பாமகவை இணைக்க முன்னெடுப்போடும் கூட்டணி கட்சியினர் ஆட்சி பங்கு என்பதால்அவர்களது தேர்தல் செயல்பாடுகள் வேகமெடுக்கும் நிலையில் திமுக கூட்டணி தேர்தலில் நிர்வாகிகளின் செயல்பாடு சுனக்கம் அடையுமா என்ற கேள்விக்கு பாஜக கூட்டணியில் அதிமுக கூட்டணி ஆட்சி என்ற கருத்தை அதிமுக எடப்பாடி தெரிவித்திராத நிலையில் அந்த கூட்டணி தொடருமா என்பது சந்தேகம் அந்த கூட்டணியில் இணைவதற்கான அச்சுறுத்து வார்த்தைகளை பாஜக தெரிவித்து வருவதாக கூறினார். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் Keep Player ஆக இருந்த திருமாவளவன் வரும் தேர்தலில் Caption ship எடுப்பாரா என்ற கேள்விக்கு பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பு தமிழகத்தில் காலூன்றாமல் இருப்பதே முக்கியம் தொடர்ந்து ஜனநாயக சக்திகளை சிதரவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு தனிப்பட்ட லாபம் எண்ணம் இல்லை. தொடர்ந்து திமுகவினரை குறிவைத்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் பாஜகவினரது கருத்திற்கு ஆதாரம் இருந்தால் அதிகாரம் கொண்டுள்ள அவர்கள் அம்பலப்படுத்தலாம் ஆனால் அரசியல் மிரட்டலுக்காக வைக்கு குற்றச்சாட்டு என தெரிவித்தார்.
Next Story