ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்க்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மயிலாடுதுறை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கருப்பு உடையணிந்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2021 சட்டமன்ற தேர்தல் கால வாக்குறுதியில் பணியில் உள்ள சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணி ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் அளிப்பதாக தெரிவித்த ஆளும்தி.மு.க. அரசு, நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது. தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் வேம்பு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... தேர்தல் கால வாக்குறுதிபடி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850/- வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை ஈடுகட்ட மற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல் அகவிலைப்படி வழங்க வேண்டும்..மருத்துவ காப்பீடு, பண்டிகை முன்பணம், குடும்பநல நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். என்ற முழக்கங்களை எழுப்பினர்.
Next Story