ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நூலகம் திறப்பு..

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நூலகம் திறப்பு..
X
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நூலகம் திறப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பொதுநூலகத்துறை சார்பில் நோயாளிகள் பயன்பாட்டிற்கான நூலகம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி மூலம் நூலகத்தை திறந்து வைத்தார். ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 500 புத்தகங்கள் அடங்கிய நூலகம் திறக்கப்பட்டது. ராசிபுரம் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் ஒய்வு பெற்ற நூலக மாவட்ட அலுவலர் வே.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மருத்துவமனையில் தலைமை மருத்துவர் கே.கலைச்செல்வி குத்துவிளக்கேற்றி நூலகத்தை திறந்து வைத்தார். ராசிபுரம் நூலக இரண்டாம் நிலை நூலகர் வே.மாதேஸ்வரன், 3-ம் நிலை நூலகர்கள் சு.விஜயலட்சுமி, மா.செந்தில்குமார், மூ.நாகராஜன் , மருத்துவமனை தலைமை செவிலியர் மேகலா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Next Story