நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!

X

திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு பேசினார் .
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயம் - பேராசிரியர் கூட்டரங்கில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.இராமலிங்கம், கே.பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு பேசுகையில்... மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள்-சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டத்தில் 'ஓரணியில் தமிழ்நாடு'- உறுப்பினர் சேர்க்கை குறித்தும், பூத் வாரியாக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் (BOOTH DIGITAL AGENT) நியமிப்பது குறித்தும்,ஒன்றிய நகர பேரூர் வாரியாக கிளை, வார்டுகளில் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.நிகழ்வில் ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட,மாநில நிர்வாகிகள்,பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், நகர்மன்ற,பேரூர் மன்ற தலைவர்கள் சிறப்பு அழைப்பார்கள் கலந்து கொண்டனர்.
Next Story