அரசு மருத்துவமனையில் மாத்திரை பற்றாக்குறை பொதுமக்கள் அவதி

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிபி மாத்திரை வழங்காததால் நோயாளிகள் அவதி
தர்மபுரி அரச மருத்துவக் கல்லூரிக்கு தினசரி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான இலக்கியம்பட்டி,செந்தில் நகர், பாரதிபுரம், அன்னசாகரம், குள்ளனூர், வெண்ணாம்பட்டி, விருப்பாச்சிபுரம், நியூ காலனி, ஆசிரியர் காலனி, தடங்கம்,செட்டிக்கரை, கடகத்தூர்,எம்ஜிஆர் நகர், அப்பாவுநகர்,கடைவீதி, போன்ற பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதில் வயதான பெரியோர்கள் ரத்த அழுத்தம், சளி இருமல், காய்ச்சல், பிபி, சுகர் போன்ற பரிசோதனை செய்து பிறகு மாத்திரை மருத்துவர்கள் எழுதி அனுப்புகின்றனர் ஆனால் அரசு மருத்துவ கல்லூரி மருந்தகத்தில் பிபி, சுகர் மாத்திரை இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர் இன்று போனால் நாளை வாருங்கள் என்று மாற்றி மாற்றி தெரிவிக்கின்றனர் மருத்துவமனை அலுவலரிடம் கேட்கும் போது மாத்திரை பற்றாக்குறை என்றும் இரண்டு நாட்களில் பிபி சுகர் மாத்திரைகள் வந்துவிடும் அப்போது அனைவருக்கும் பிபி சுகர் மாத்திரை வழங்கப்படும் என்று தெரிவித்தனர் நோயாளிடம் கேட்கும் போது ஒரு வாரமாக மாத்திரை இல்லை என்று தெரிவிக்கின்றனர் இதனால் நோயாளிகள் ஏமாற்றம் அடைகின்றனர் அரசு மருத்துவமனையில் நோயாளர்களுக்கு பிபி சுகர் மாத்திரை வழங்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story