தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த, சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு அடைவதற்காக, வங்கிக்கடன்களை வழங்கினார்கள்.

ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் நேரலையில் பார்வையிட்டு, 4,706 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 37.61 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த, சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு அடைவதற்காக, வங்கிக்கடன்களை வழங்கினார்கள். இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் நேரலையில் பார்வையிட்டு, 4,706 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 37.61 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இன்று (11.06.2025) நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த, சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு அடைவதற்காக, வங்கிக்கடன்கள் வழங்கினார்கள். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து நேரலையில் பார்வையிட்டனர். பின்னர், 467 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4,706 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.37.61 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்தியாவிலேயே, முதல் முறையாக, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான் 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) உதவியுடன், வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு, மகளிர் முன்னேற்றத்திற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கி கடனுதவி வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருடந்தோறும் மகளிர் சுயஉதவிக்குழு தினம் என்ற நாளை அறிவித்து, அந்நாளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் இணைப்புக்கான ஆணைகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். இதனால், மகளிர் சுய குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைந்துள்ளது. மேலும், மகளிரைக் கொண்டு, சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து, சிறப்புக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் குழுக்கள் மற்றும் முதியோர்களைக் கொண்ட மதி குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மகளிர் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் பெறவும், சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேறவும் செயல்படுத்தப்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஏராளமான மகளிர் பயன்பெற்றுள்ளனர். அந்தவகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 467 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4,706 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.37.61 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் வழங்கினார்கள். மேலும், மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து விற்பனை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், மகளிர் திட்ட அலுவலர் (பொ) கி.ரேச்சல் கலைச்செல்வி, உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார்,கிருஷ்ணன், சங்கர், முருகதாஸ், பேரூராட்சி தலைவர்கள் த சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), ஜாகிர் உசேன் (லப்பைக்குடிகாடு), மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story