வாடிப்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பிறந்தநாள் விழா.

X

மதுரை அருகே சுதந்திரப் போராட்ட வீரரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் 5 சார்பாக சுதந்திர போராட்ட 5 வீரர் வாலுக்கு வேலி பிறந்தநாள் விழா ஜெமினி பூங்கா முன்பு நேற்று (ஜூன்.10) கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் சார்லஸ் ரங்கசாமி தலைமை - தாங்கினார். கௌரவதலைர் - எஸ். டி.எம். செந்தில்குமார். இணை செயலாளர் அனல் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஆதிமுத்துக்குமார் வரவேற்றார். இந்த விழாவில் பேரூராட்சி தலைவர் மு. பால்பாண்டியன் வாலுக்கு வேலி உருவபடத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினார். இதில் பேரூராட்சிதுணைத் தலைவர் கார்த்திக், காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம். ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணா, அதிமுக பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன். தேமுதிக மாவட்ட துணை செயலாளர டாக்டர் பொன் யாழினி, பேரூர் செயலாளர் பாலாஜி, முன்னாள் பேரூர் செயலாளர் ஜெயராஜ், நாம் தமிழர் கட்சி சந்திரசேகரன். சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கம். சரவணபிரகாஷ், சரவணபிரபு, வெள்ளைச்சாமி, சீனிவாசன், நடராஜன். சாந்தகுமார், சுப்பிரமணி, துரையப்பன். ராமநாதன், பூமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.
Next Story