காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

X

மதுரை உசிலம்பட்டி அருகே பழமையான காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை 1 வது வார்டில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின் கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜூன்.11) நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி பின்பு நான்கு கால பூஜைகள் நடைபெற்று தொடர்ந்து கடம் புறப்பாடாகி காளியம்மன் கோவில் 40 அடி உயரமுள்ள கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு புனிநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதில் எழுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து கோவில் விழா கமிட்டியினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story