மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட குரும்பலூர் பேரூராட்சியில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இன்று (11.06.2025) நேரில் ஆய்வு செய்தார்.
குரும்பலூரில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட குரும்பலூர் பேரூராட்சியில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இன்று (11.06.2025) நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் ஒரு சிறப்பான திட்டம் ஆகும். தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் முக்கிய நோக்கம் கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளும், மறுவாழ்வு சேவைகளும் இல்லம் தேடி சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். மேலும்,இத்திட்டத்தை செயல்படுத்த சமுதாய வள பயிற்றுநரக சீட்ஸ் (Community Service Provider) தொண்டு நிறுவனம் மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்தொண்டு நிறுவனம் பெரம்பலூர் மாவட்டத்தில் 02 ஒருங்கிணைப்பாளர்கள், 04 சமூக பணியாளர், 04 இயன் முறை சிகிச்சையாளர்கள், 07 சிறப்பு ஆசிரியர்கள், 12 சமுதாய வழி நடத்துநர்கள், 28 சமுதாய மறுவாழ்வு பயிற்றுநர்கள் என மொத்தம் 57 நபர்கள் மூலமாக நகர்புறம் மற்றும் கிராமப்புறங்கள் முழுவதும் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளையும், பொதுமக்களையும் மொபைல் ஆப்மூலம் கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வருகி்ன்றனர். அதன்படி, குரும்பலூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சமூக தரவு சேகரிப்பு பணியாளர்களிடம் மொபைல் ஆப்மூலம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவைகள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தார். சேகரிக்கப்படும் தகவல்களை முழுமையாக சேகரித்திடவும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகளையும் சமுதாய வள பயிற்றுநரக சீட்ஸ் (Community Service Provider)தொண்டு நிறுவனம் வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரிடம் அறிவுறுத்தினார். மேலும், இல்லம் தேடிவரும் முன்களப் பணியாளர்கள் கேட்கும் ஆவணங்களை பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் காண்பித்திடவும், தயக்கமின்றி தகவல்களை அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள், சமுதாய வள பயிற்றுநரக சீட்ஸ் (Community Service Provider)தொண்டு நிறுவனம் உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story