திருப்பத்தூர் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்

திருப்பத்தூர் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்
X
திருப்பத்தூர் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்து அரசிதழின் சிறப்பிதழ் 28.05.2025 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளான 047-வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் பதிவு அலுவலராக வாணியம்பாடி வருவாய் கோட்ட அலுவலர். 048-ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் பதிவு அலுவலராக சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர். 049-ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் பதிவு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் மற்றும் 050-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் பதிவு அலுவலராக திருப்பத்தூர் வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோர்களை வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு புதியதாக தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல் 2026 ம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும். இறந்த வாக்காளர்களின் பெயர்கள், முகவரி மாறிச்சென்ற வாக்காளர்கள் இரட்டைப் பதிவு போன்றவற்றை நீக்கம் செய்தும் புதிய வாக்காளர்களை சேர்த்தும் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது மற்றும் வாக்குச்சாவடி நிலையங்கள் ஆகியவற்றை தணிக்கை மேற்கொள்ளவும் மேற்படி அலுவலர்ளே பொறுப்பாவார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.
Next Story