திருப்பத்தூரில் படை தலைவன் திரைப்படத்திற்கு குவியும் பொதுமக்கள்

திருப்பத்தூரில் படை தலைவன் திரைப்படத்திற்கு குவியும் பொதுமக்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவச டிக்கட் வழங்கி கொண்டாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இளைய கேப்டன் சண்முக பிரபாகரன் நடித்து வெளிவந்த படைத்தலைவன் திரைப்படத்திற்கு உற்ச்சாக வரவேற்பு! முன்னூறு நபர்களுக்கு இலவச சீட்டு வழங்கி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தேமுதிக கட்சியினர் கொண்டாட்டம்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்று நாட்களாக திரையரங்குகளில் மக்கள் நன்மதிப்பையும் வரவேற்பை பெற்று வரும் படைத்தலைவன் CKC திரையரங்கில் ரசிகர்கள் மற்றும் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் படைத்தலைவன். யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகள் வெளிவந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது பொது மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் இந்த படைத்தலைவன் திரைப்படம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஐந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு ஓடுகின்றது திரளான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர் தேமுதிக மாவட்ட செயலாளர் ஹிரிகிருஷனன் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு இலவச டிக்கட் வழங்கி வெற்றி நடை போட்டுகொண்டு இருக்கும் படை தலைவன் திரைப்படத்திற்கு அலைகடலான திரையருங்குகளில் குவியும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் நிலை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story