வாணியம்பாடி அருகே தொழில் அதிபரை கட்டிவைத்து கொள்ளை முயற்சித்தவர் கைது!

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தொழில் அதிபரை கட்டிவைத்து கொள்ளை முயற்ச்த்தவர் கைது! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நீலி கொல்லை புது தெருவில் தொழிலதிபர் உட்பட இரண்டு பேரை கட்டிப்போட்டு வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் தொழிலதிபர் வீட்டில் வேலை செய்து வந்த வாணியம்பாடி, அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த சக்திவேல் மற்றும் திருப்பத்தூர் அகரம், கொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்த இளவரசன், திருப்பதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த சாந்தகுமாரி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து எஸ் பி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த 5 க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story

