விவசாயிகள் மானியத்தில் மீன் வளர்ப்பு பண்ணை தொடங்க வலிவுறுத்தி விண்ணப்பம் ஆட்சியர் அறிவிப்பு

விவசாயிகள் மானியத்தில் மீன் வளர்ப்பு பண்ணை தொடங்க வலிவுறுத்தி விண்ணப்பம் ஆட்சியர் அறிவிப்பு
X
விவசாயிகள் மானியத்தில் மீன் வளர்ப்பு பண்ணை தொடங்க வலிவுறுத்தி விண்ணப்பம் ஆட்சியர் அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து மீன் உற்பத்திப் பணிகளை செய்து வருகின்றனர். மேற்படி மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பினை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டும் மற்றும் மீன் உற்பத்தி மூலதனமான மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கும் பொருட்டும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என 2025-26 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1 ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 10,000 எண்ணிக்கையிலான மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5000/- மானியமாக வழங்கப்படவுள்ளது. எனவே. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்திட்டம் குறித்தான இதர சந்தேகங்களுக்கும். விண்ணப்பங்கள் பெறவும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம். வேலூர், காந்திநகர் காட்பாடி-6 (தொலைப்பேசி எண் -04162240329) அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி. தெரிவித்துள்ளார்.
Next Story