தெத்துப்பட்டியில் குடும்பத்த தகராறில் தற்கொலை செய்த வட மாநில தொழிலாளி.

தெத்துப்பட்டியில் குடும்பத்த தகராறில் தற்கொலை செய்த வட மாநில தொழிலாளி.
தெத்துப்பட்டியில் குடும்பத்த தகராறில் தற்கொலை செய்த வட மாநில தொழிலாளி. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய் போக்டா 42. இவர் அரவக்குறிச்சி அருகே தெத்துப்பட்டியில் தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரமாக இவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விரக்தி அடைந்த அஜய் போக்டா ஜூன் 18ல் பணி செய்யும் நிறுவனத்தின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். சம்பவம் அறிந்த அவரது சகோதரர் தினேஷ் போக்டா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த அஜய் போக்டா உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி போலீசார்.
Next Story