ஜோலார்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து இரண்டு பேர் காயம்!

X
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து இரண்டு பேர் காயம் திருப்பத்தூர் மாவட்டம் பால்நாகுப்பம் பகுதியை சேர்ந்த அனு முத்து மகன் விஷ்ணு வயது 19 இவர் மினி வேனில் மாட்டு தீவனம் ஏற்றிக்கொண்டு ஜோலார்பேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் அருகே செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த சதீஷ் வயது 33 இருவரும் படுகாயம் அடைந்தனர் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையாக சேர்க்கப்பட்டனர் ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

