சாலவாக்கம் ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பம் வரவேற்பு

X
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள சாலவாக்கத்தில் புதியதாக துவங்கியுள்ள சாலவாக்கம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரடி சேர்க்கை, நேற்று முதல் பெறப்படுகிறது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை அணுகலாம். தொழிற்பிரிவுகளில் சேர, 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், போட்டோ, மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் சாலவாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். 63790 90205, 90471 33500, 81248 76478 ஆகிய மொபைல் எண்களிலும் விபரங்கள் கேட்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

