மறைமலைநகர் வடக்கு நகர தி.மு.க சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

X
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள மறைமலைநகர் வடக்கு நகர தி.மு.க சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இவற்றில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மறைமலைநகர் வடக்கு நகர திமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் 6, 7, 10, 12,ஆகிய வார்டுகளில் நடைபெற்றது. இதில் மறைமலைநகர் நகர மன்ற தலைவர், வடக்கு நகர செயலாளருமான ஜெ. சண்முகம் தலைமை தாங்கினார்,வார்டு செயலாளர்கள் லெனின், சங்கர், சரவணன், சுரேஷ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு தொகுதி தேர்தல் பார்வையாளர் பிரபு கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினர். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கமலக்கண்ணன், வார்டு கவுன்சிலர்கள் ஜெ.சண்முகம்,காயத்ரி சரவணன்,தேவி கோகுலகிருஷ்ணன்,உட்பட வார்டு செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மகளிர் அணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story

