கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத அவல நிலை - இருதய கோளாறோடு போராடும் மக்கள்!

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத அவல நிலை -  இருதய கோளாறோடு போராடும் மக்கள்!
X
பல ஆண்டுகளாக காத்திருந்தும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை கொடுக்க முடியாத அவலம்.
கோவை பீளமேட்டை சேர்ந்த சரண்யாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்காக கோவையின் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை முயற்சி செய்யப்பட்ட பின்பு, அரசு மருத்துவமனையை நாட அவர்களுக்கு ஆலோசிக்கப்பட்டது. இப்போது கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மாத்திரைகள் மட்டும் வழங்கப்பட்டு, பின்னர் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றே சொல்லப்பட்டுவருவதாகவும் சரண்யா தெரிவித்தார். மீண்டும் அணுகியபோது, அறுவை சிகிச்சைக்கான மருத்துவர்கள் இல்லை என கூறப்பட்டு, தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை வழங்கியுள்ளனர். எனக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். கணவரை அழைத்துக் கொண்டு மற்றொரு நகரம் செல்வது எனக்கு எவ்வளவு கடினம் என்பதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இவ்வளவு வருடங்களாக அரசு மருத்துவமனையில் காத்திருந்தும் இதுபோன்ற பதில்கள் வருவதால் மனமுடைந்துவிட்டேன் என வேதனையுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருப்பதாக சரண்யா கூறியுள்ளார். மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் இவ்வாறு இடர்பாடுகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை தொடருவதைச் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Next Story