கனிமொழி எம்.பியை அமர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

X
அண்ணா அறிவாலயத்தில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில் கனிமொழி கருணாநிதி எம்.பியை அமர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை, அண்ணா அறிவாலயத்தில், புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை அமர்த்தினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திமுக துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் புச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story

