மதுபான கடையில் முற்றுகையிட்ட பொது மக்கள்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி அடுத்து 4 ரோடு பகுதியில் அரசு மதுபான கடை கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இவ்வழியாக பள்ளிக்குச் சென்று வருவதால் கடைக்கு இடையூறாக மது பிரியர்கள் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வருவதால் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் பொதுமக்கள் இன்று காலை மதுபான கடை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தகவலை அளித்து பாப்பிரெட்டிப்பட்டி கடத்தூர் காவல் நிலைய காவலர்கள் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story




