மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு குறித்த அறிவிப்பு

மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு குறித்த அறிவிப்பு
X
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நடை அடைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (ஜுலை 14) மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு ஜுலை 13ம் தேதி மாலை சுவாமி சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சி பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி இரவு திருப்பரங்குன்றம் எழுந்தருள்கிறார். ஜுலை 14 காலை கும்பாபிஷேகம் முடிந்து இரவு திருப்பரங்குன்றத்தில்‌‌ இருந்து புறப்பாடாகி நள்ளிரவு சுவாமி சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சி பஞ்சமூர்த்திகளுடன் திருக்கோயிலை அடைவர். அதுசமயம் ஜுலை 13 தேதி மாலை மற்றும் ஜூலை 14 திருக்கோயில் நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story