முதலமைச்சர் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள நிலையில் ட்ரோன்கள் பறக்கவும் விளம்பர பலூன்கள் பறக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக முதலமைச்சர் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள நிலையில் ட்ரோன்கள் பறக்கவும் விளம்பர பலூன்கள் பறக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை. திருப்பத்தூர மாவட்டத்திற்கு ஜூன் 25 மற்றும் 26 தேதிகளில் தமிழக முதலமைச்சர் வருகை தந்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பல்வேறு பிரிவுகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைப்பது பொதுமக்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள நிலையில்... திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டல வாடி பகுதியில் பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு வழிநெடுகிலும் கட்சி கொடிகள் புதிய தார் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன... இந்நிலையில் நாளை ஜூன் 25ஆம் தேதி காலை முதல் மறுநாள் ஜூன் 26 ஆம் தேதி நள்ளிரவு வரை ட்ரோன்கள் பறக்கவும் விளம்பர பலூன்கள் பறக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் அறிவித்த தடை அறிவிப்பை மீறி யாராவது ட்ரோன்கள் பறக்க விட்டாலும் விளம்பர பலூன்கள் பறக்க விட்டாலும் சட்டபூர்வமான நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
Next Story

