தாராபுரத்தில் குரங்குகள் அட்டகாசம்

X
தாராபுரம் பகுதியில் உள்ள சர்ச் சாலையில் தனியார் உதவி பெறும் பள்ளி, திரையரங்கம் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் என 50-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நேற்று மதியம் தனியாருக்கு சொந்தமான மதில் சுவரில் 2 குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த குரங்குகள் ஊதியூர் வனப்பகுதியில் இருந்து உணவுக்காக தாராபுரம் பகுதிக்கு வந்ததா? என தெரியவில்லை. இந்த குரங்குகள் சிறுவர், சிறுமிகளை பயமுறுத்துவதும், தனியாக செல்லும் பெண்கள் கையில் வைத்திருக்கும் பொருட்களை பறித்து செல்வதும், பழக்கடைகளில் வெளியே தொங்க விடப்பட்டிருக்கும் பழங்களை பறித்துக்கொண்டு செல்வதும் வாடிக்கையாக வைத்துள்ளன. எனவே குரங்குகளின்தொல்லை தாங்க முடியாமல் அவற்றை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

