திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
X
அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியை திருவேங்கடம் உதவி ஆய்வாளர் யோபுசம்பத்ராஜன் தலைமையில் இன்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்ரசு, 2ம் நிலை காவலர் பெருமாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வேலுச்சாமி, போதை ஒழிப்பு பொறுப்பாசிரியர் முனிராஜ், உடற்கல்வி ஆசிரியர் திருப்பதி, ஓவியா ஆசிரியர் மாரியப்பன், என் எஸ் எஸ் அலுவலர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story