தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
பாலக்கோடு தீயணைப்பு நிலையத்தில், தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி, நிலைய அலுவலர்கள் திருத்தணி முருகன், செல்வம் தலைமையில் நடந்தது. டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் திடீர் வெள்ளத்தில் பொதுமக்கள் மற்றும் கால் நடைகள் சிக்கி கொண்டால் எவ் வாறு மீட்பது, கிணறு, ஆறு மற்றும் ஏரிகளில் குளிக்கும் போது, தவறுதலாலாக தண்ணீரில் சிக்கி கொண்டால் எவ்வாறு தப்பிப்பது, மேலும் உடன் இருப்பவர்கள் தண்ணீரில் சிக்கி மூழ்கும் போது, நீளமான குச்சி அல்லது கயிறு மூலம் அவர்களை மீட்பது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சியினை அளித்தனர். சிறப்பு நிலைய அலுவலர் மகேந்திரன், தீயணைப்பு வீரர்கள், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





