திருப்பத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு நல திட்ட உதவி வழங்கினார்

X
திருப்பத்தூர் மாவட்டம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய சிப்காட், 6 கோடி மதிப்பில் துணை மின் நிலையம், 30 கோடி செலவில் 7 கிலோமீட்டர் மலைவழி சாலை, 15 லட்சம் மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் , ஒரு கோடி மதிப்பில் புதிய நூலகம்... 5 புதிய அறிவிப்புக்களை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்தார்.. ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்று 517 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்று 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து , 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1 லட்சத்து 168 பயனாளிகளுக்கு வழங்கினார். மொத்தமாக ரூபாய் 517 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரை ஆற்றினார். திருப்பத்தூர் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் மனம் நிறைந்து விட்டேன் அவர்கள் அளித்த வரவேற்பின் மூலம் 2026 மட்டும் இல்லை 31 மற்றும் 36 என்றைக்கும் நாம் தன் நாட்டை ஆளப்போகிறோம் என்பது உறுதி.. இந்திய அளவில் ஜிடிபி யில் தமிழ்நாடு 9.21விழுக்காடு அடைந்துள்ளது. மேலும் நீடித்த வளர்ச்சி மருத்துவத்தில் மூன்றாம் இடம் உயர்கல்வியில் முதலிடம் தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்திய நாட்டின் சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் தனிநபர் வளர்ச்சி அதிகம் . கிராமப்புறங்கள் நகர்ப்புற வளர்ச்சிக்கு இணையாக வளர்ச்சி அடைந்துள்ளது . எல்லாருக்கும் எல்லாம் எல்லா மாவட்டத்திற்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் திருப்பத்தூரில் குடிநீர் திட்டம் சாலை விரிவாக்கம் பள்ளிக்கூடங்களில் ஆய்வகங்கள் மேம்பட்ட உள் கட்டமைப்பு கோயில்களுக்கு குடமுழுக்கு விளையாட்டு அரங்கம் சுற்றுலா தளம் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக திருப்பத்தூர் மாவட்டம் மல்லகுண்டா பகுதியில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய சிப்காட், குமாரமங்கலம் பகுதியில் 6 கோடி மதிப்பில் துணை மின் நிலையம், ஆலங்காயம் நெக்னா மலை 30 கோடி செலவில் 7 கிலோமீட்டர் மலைவழி சாலை, திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அமைந்திருந்த இடத்தில் 15 லட்சம் மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் மற்றும் ஆம்பூரில் ஒரு கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, மாநில அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன் , காந்தி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லதம்பி, தேவராஜ், வில்வநாதன், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story

