திருப்பத்தூரில் மாங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை!

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தென்னை,மற்றும் மா, விலை விழ்ச்சியாள் வாழ்வா?சாவா? என்று கடும் வேதனையில் விவசாயி ஆவேசத்துடன் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் சிவ சவுந்தரவள்ளி தலைமையில் நடைபெற்றது இந்த விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு கோரிக்கை குறை நிறைகளை குறித்து பேசப்பட்டது இந்த கூட்டத்தில் விவசாயி ஒருவர் ஆதங்கத்துடன் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய் விலை விழ்ச்சியால் வாங்க வியாபாரிகள் முன் வரவில்லை மரத்தில் பழுத்து அழுகி சேதமாகிரது போட்ட முதலீடு கூட எடுக்கமுடியாமல் திணறி வருவதாகவும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதேபோல் விவசாயிகள் வாழ்வாதாரமாக விளங்க கூடிய தென்னைமரம் குருத்து பூச்சியால் தென்னைமரம் பாதிக்கப்பட்டு வருகின்றது உடனடியாக நிருவாகம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மரத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேதனையுடன் கோரிக்கை முன் வைத்தனர் அதேபோல் சானகுப்பம் விவசாயி ஒருவர் கூறுகையில் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள காய்கறிகளை விற்க ஆம்பூர் பகுதியில் ஒரு உழவர் சந்தை கூட இல்லாமல் அவதிக்குள்ளாகி வருவதாக வேதனை தெரிவித்தனர் மேல் சானங்குப்பம் என்றாலே யாவரும் பெண் கூட கொடுக்க முன் வருவதில்லை சாலை வசிதிகள் இல்லாத காரணத்தினால் சாலை வசதிகள் செய்து தர கோரிக்கை முன் வைத்தனர் அதேபோன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற கடனை திருப்பி கட்டிவிட்டு மீண்டு கடன் பெற வேண்டுமென்றால் அலை கழித்து வருவதாகவும் கிலிரன்ஸ் சான்றிதழ் அனைத்து வங்கிகளிலும் வாங்க சொல்லி வலியுறுத்தி கடன் வழங்க தாழ்த்தி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர் அதேபோன்று நெல் கதிர் அடிக்கும் நெர் களஞ்சியம் கட்டி தருவதாக காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்தனர் விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் இந்த நிகழ்ச்சியில் வேளாண் துறை , தோட்ட களை துறை, மின் துறை,தீயணைப்பு துறை. காவல் துறை உள்ளிட்ட துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

