நாட்றம்பள்ளி அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கீரைக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது பாம்பு கடித்ததில் வாயில் நுரை தள்ளிய நிலையில் விவசாயி உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஏரி கொடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ஆறுமுகம் (28 )என்பவருக்கு கலா (24 )என்பவருடன் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது.இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான அறையை ஏக்கர் நிலத்தில் கீரை விதைத்துள்ளார். கீரைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக இன்று விடியற்காலை அருகே உள்ள நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது பாம்பு கடித்ததில் ஆறுமுகம் அங்கேயே மயங்கி அருகே இருந்த செங்கல் மீது விழுந்துள்ளார். அதனை தொடர்ந்து இன்று காலை பாம்பு கடித்ததின் வாயில் நுரை தள்ளி கொண்டு இருந்த ஆறுமுகத்தை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கீரைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்ததி உள்ளது.
Next Story

