திருப்பத்தூர் அருகே மின்சாரம் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

X
திருப்பத்தூர் மாவட்டம் அம்பேத்கர்புரம் பகுதியில் பல மணி* நேரம் மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் சாலை மறியல்! ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு! மாடப்பள்ளி மின்சாரத்துறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் அலட்சியம் ! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பேத்கர்புரம் பகுதியில் தொடர்ந்து பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் 15 நாட்களாக மாலையில் இருந்து இரவு 10 மணி வரை மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இதனை தொலைபேசியின் மூலம் மாடப்பள்ளி மின்சாரத்துறை அதிகாரியிடமும் ஊழியர்களிடமும் தெரிவித்தால் அலட்சியப் போக்கோடு பதில் சொல்கிறார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள் பின்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று நீண்ட வரிசையில் நின்றது. கிராம காவலர்கள் தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாகவும் மின்சாரம் வந்ததால் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர் தொடர்ந்து அம்பேத்கர்புரத்தில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாத காரணத்தினால் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது
Next Story

