புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர்
மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024-2025 கீழ் கொட்டாம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலை கடையை மக்களின் பயன்பாட்டிற்கு இன்று (ஜூன்.29) காலை வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார். உடன் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ,மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




