பைக்கில் இருந்து விழுந்த காவலர் பலி

பைக்கில் இருந்து விழுந்த காவலர் பலி
X
வெள்ளகோவில் அருகே பைக்கில் சென்ற தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலி - காவல்துறை விசாரணை.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் அருகே ஊடையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை காவலர் பூபதி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்து பலியானார். வெள்ளகோவில் காவல்துறை விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். பலியான பூபதியின் உடல் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. காங்கேயம் வெள்ளகோவில் அருகே முத்தூர் - ஊடையம் சாலையில் வேப்பமரம் பஸ்டாப் அருகே புல்லட் பைக்குடன் கீழே விழுந்து கிடப்பதாக தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளகோவில் காவல் துறையினர் பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அங்குள்ள வளைவான பாதையில் திரும்பும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காட்டிற்குள் விழுந்தவர் ஓரமாக இருந்த மைல் கல்லில் தலை அடித்ததில் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி விசாரணையில் இறந்த பூபதி தலைமை காவலராக கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணிபுரிந்து வருவதாகவும். சொந்த ஊர் கொடுமுடி அருகே முருகம்பாளையம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது. இவருக்கு திருமணம் ஆகி இந்துமதி (33) என்ற மனைவியும் சிவபிரசாத்(10) என்ற மகனும் நேத்ரா (8) என்ற மகளும் உள்ளனர். வெள்ளகோவில் ஊடையம் பகுதியில் பைக்கில் இருந்து காவலர் பூபதி விபத்து ஏற்பட்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story