மெதுகும்மல் ஊராட்சியில் சாலை பணிகள்

மெதுகும்மல் ஊராட்சியில்  சாலை பணிகள்
X
எம்எல்ஏ துவக்கினார்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட, தையாலுமூடு சோதனைச்சாவடி - கிழங்குவிளை - வேளார்குடி (முப்பந்திகோணம்) சாலை, கோழிவிளை ஏலூர்காடு ஆகிய இரண்டு சாலைகளையும் சீரமைத்து பல வருடங்கள் ஆகியதாலும், கடந்த 12-11-2021 - அன்று ஏற்பட்ட புயல் மற்றும் பெரு கனமழையினாலும் சாலைகளின் பக்கச்சுவர்கள் இடிந்து விழுந்தும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இதனால் பழுதடைந்த இந்த சாலைகளை உடனடியாக முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சாலை சீரமைக்க சீரமைக்க மொத்தம் ரூ. 84.50 லட்சம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில் (MGSMT) கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று தையாலுமூடு சோதனைச்சாவடி - கிழங்குவிளை வேளார்குடி (முப்பந்திகோணம்) சாலை, கோழிவிளை ஏலூர்காடு ஆகிய இரண்டு சாலைகளையும் சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜய குமார், மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story