ஏலகிரி மலையில் ஆறு வருடத்திற்கு பிறகு பெயரளவிற்கு நடைபெற்ற ஒரு நாள் கோடை விழா! ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்து அமைச்சர்கள்*

X
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ஆறு வருடத்திற்கு பிறகு பெயரளவிற்கு நடைபெற்ற ஒரு நாள் கோடை விழா! ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்து அமைச்சர்கள்* திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி கோடை விழா ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கொண்டாடப்படுவது வழக்கம் கடந்த 2018 ஆண்டு கடைசியாக ஏலகிரி மலையில் கொடை விழா கொண்டாடப்பட்டது. 6 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் ஏலகிரி மலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து இன்று ஒருநாள் மட்டும் கோடை விழா நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏவா வேலு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி ஆகியோர் ரிப்பன் வெட்டி கோடை விழாவை துவக்கி வைத்தனர். அதற்கு முன்னதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு மற்றும் சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோருக்கு மயிலாட்டம், கோலாட்டம், மற்றும் மேளதாளம் முழங்க அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கோடை விழாவில் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்த அனைத்து இடங்களையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் பெயரளவில் மட்டுமே இந்த கோடை விழா நடைபெற்றது இதில் மக்கள் எதிர்பார்த்தபடி சிறப்பான கண்காட்சிகள் ஏதும் காட்சிப்படுத்தப்படவில்லை. மேலும் இங்கு மலர் கண்காட்சி, செடி கண்காட்சி, மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகரப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சார்பில் வைக்கப்பட்ட பழக் கண்காட்சி, மற்றும் சில ஸ்டால்கள் மட்டுமே வைக்கப்பட்டன. சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில் இந்த ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகளுக்கு பயன் பெறும் வகையில் இந்த ஏலகிரி மலைக்கும் ஏற்காட்டு மலைக்கும் முதல்வர் ஒப்புதலோடு கேபிள் கார் தனியார் நிறுவன பங்களிபதோடு கேபிள் கார் அமைக்க பணிகள் நடைபெற இருக்கின்றது ஏலகிரி மலைக்கு தேவையானதை சுற்றுலா பயணிகளுக்கு செய்து தர இருக்கின்றோம் இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் விரிவநாதன், மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் நகர மன்ற தலைவர்கள், மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மற்றும் ஏலகிரி மலை சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story

