திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி பொதுமக்கள் கற்களை வைத்து சாலை மறியல்..

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி பொதுமக்கள் கற்களை வைத்து சாலை மறியல்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு திருமால் நகர் பகுதியில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி ஆணையர் சாந்தியிடம் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வழியாக மடவாளம் செல்லும் சாலை திருமால் நகர் பகுதியில் சாலை நடுவே கற்களையும் அதேபோல காலி குடங்களையும் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர் இருப்பினும் சமாதானம் ஆகாத பொதுமக்கள் கமிஷனர் சம்பவம் இடத்திற்கு வரவேண்டும் என கூறினர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் கூடிய விரைவில் அடிப்படை வசதிகளை சரி செய்து தரப்படும் என்று கூறியதன் காரணமாக அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story

