நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே இன்ஸ்டாகிராமில் பழக்கமாகி காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அன்சாகரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் (21) இவர் ஓசூர் பகுதியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கே.பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சந்தியா (19) என்பவருடன் கடந்த 1 ஆண்டுக்கு முன் இன்ஸ்னனகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஜெயப்பிரகாஷ் மற்றும் சந்தியா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி ஜெயப்பிரகாஷ் மற்றும் சந்தியா இருவரும் வீட்டை விட்டு வெளியேறு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர் அதன் பின் இன்று நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது நாட்றம்பள்ளி போலீசா இருதரப்பு பெற்றவரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்த போது சந்தியாவின் பெற்றோர் மட்டும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர் ஜெயபிரகாசின் பெற்றோர் பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையத்திற்கு வராத நிலையில் சந்தியா போலீஸாரிடம் காதல் கணவரான ஜெயப்பிரகாஷ் உடன் செல்கிறேன் எனக் கூறியதை தொடர்ந்து போலீசார் ஜெயப்பிரகாஷ் உடன் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் காரணமாக காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் காதல் வயப்பட்டு பெற்றோர்களை எதிர்த்து வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இரண்டு பேரும் காதல் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

