திருப்பத்தூரில் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் ஆட்சியரிடம் மனு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் நடைபாதை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்களை அலைக்கழிக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு. திருப்பத்தூர் திருப்பத்தூர் அறிஞர் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு அதை ஒப்பந்த அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஏலம் விட்டு கடையை ஏலம் எடுத்தவர்கள் தினந்தோறும் அண்டை மாநிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருகின்ற பல்வேறு காய்கறிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தினசரி காய்கறி மார்க்கெட்டிற்குள் இடம் இல்லாதவர்கள் வெளியே திருப்பத்தூர் வாணியம்பாடி செல்லும் சாலை ஓரமாக தினசரி காய்கறி மார்க்கெட் வாசல் அருகாமையில் நடைபாதை வியாபாரிகள் மட்டுமின்றி இடைத்தரகர்களை சந்திக்காமல் விளைகின்ற விளைச்சலை எடுத்து வந்து நேரடியாக விவசாயம் செய்கின்ற விவசாயிகளும் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி ஆணையர் ஊழியர்களை அனுப்பி வைத்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வைத்திருக்கும் காய்கறிகளை அள்ளி கொட்டி செல்வதும் எடை கற்கள் மற்றும் எடைகளை அப்புறப்படுத்தி செல்வதும் தொடரும் நிலையில் நேற்று அதிகாலை இதே சம்பவத்தின் காரணமாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜானி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தினந்தோறும் காலை ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களில் மட்டுமே தங்களது வியாபாரம் நடைபெறும் அதற்கு பின்பு நாங்கள் சென்று விடுவோம் எனவே தொடர்ந்து அதே இடத்தை கொடுக்க வேண்டி மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நகராட்சி ஆணையரிடம் முறையாக எழுத்துப்பூர்வமாக மனு அளித்து பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
Next Story

